கிருமி நாசினி தெளிக்கும் பணியில் நடிகர் அஜீத்?

’ மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி’’ யில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ‘’தாக்ஷா’ என்ற குழுவை உருவாக்கி இருப்பது தெரியும் தானே?


ஆளில்லா குட்டி விமானங்களை உருவாக்கி சமூக சேவை ஆற்றி வருகிறார்கள்.

விவசாயம், கண்காணிப்பு போன்ற பணிகளுக்கு இவர்களின் குட்டி விமானங்கள் பயன்படுத்தப்படுகிறது.

இப்போது, தமிழக அரசுடன் இணைந்து கொரோனாவை ஒழிப்பதற்கு, கிருமி நாசினி தெளிக்கும் குட்டி விமானத்தை ‘தாக்ஷா’ உருவாக்கியுள்ளது.

இரு தினங்களுக்கு முன்னர் இந்த விமானம் 3 லட்சம் சதுர கி.மி.பரப்பளவை உள்ளடக்கிய பகுதியில் 900 லிட்டர் கிருமி நாசினியை தெளித்துள்ளது.

’தாக்ஷா’வின் பிரதான ஆலோசகர்களில் ஒருவர், நடிகர் அஜீத்.
சென்னையில் இருந்தால் எம்.ஐ.டி.க்கு வந்து தாக்ஷா குழுவினருடன் அளாவளாவி விட்டு போவது அவரது வழக்கம்.

’’ கொரோனாவை ஒழிக்கும் தங்கள் பணியில் நடிகர் அஜீத் நேரமும், சந்தர்ப்பமும் இருந்தால் பங்கேற்க கூடும்’’ என்கிறார்- ’தாக்ஷா’’வின் முக்கிய நிர்வாகியான அருள் செங்கன்.
வாலியே,வலிமையே, வருக. கொரோனா ஒழிப்பு பணியில் உங்கள் பங்கை தருக.