அஜித் பயன்படுத்தும் போனின் விலையை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்!

நடிகர் அஜித், தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்தாலும் அவர் தினமும் பயன்படுத்தும் போனின் விலை வெறும் 1500 ரூபாய் தான்.

ajith

அஜித்தை பிடிக்காதவர்கள் யாருமே இருக்கமுடியாது. அவரை பொதுமக்கள் மட்டுமல்ல சினிமாவில் உள்ளவர்களுக்கும் பிடிக்கும். சினிமா மட்டுமல்ல மற்ற விஷயங்களிலும் அஜித்தை அனைவருக்கும் பிடிக்கும் என்ற நிலை உருவாகிவிட்டது.

அவர் தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள். இப்படத்தில் திருச்சி ரமேஷ் என்பவரும் அஜித்துடன் நடித்துள்ளார். அண்மைகாலமாக சமூகவலைதளங்களில் டப்ஸ் மாஷ் செய்து, ஆடிப்பாடி கலக்கி வந்தவர்தான் இந்த ரமேஷ்.

அண்மையில் ரமேஷ் அளித்த பேட்டியில் ஒன்றில், ‘‘ அஜித் மிக சிறந்த மனிதர். எல்லோரிடமும் அன்பாக பேசக்கூடியவர். நல்ல பொறுமைசாலி. அப்படியிருந்தும் அவர் தினமும் பயன்படுத்தும் செல்போனின் விலை வெறும் ரூ. 1500 மதிப்புள்ள ஜியோ போன்தான் ’’ என்றார் ரமேஷ்.