ரஜினியை தொடர்ந்து  பந்திப்பூர் காட்டுக்கு சென்ற  அக்‌ஷய் குமார்..

சாகச மன்னன் பியர் கிரில்ஸ், பிரபலங்களை காட்டுக்குள் அழைத்து சென்று தனது ‘’INTO THE WILD’’ நிகழ்ச்சிக்காக ,அவர்களை சாகசம் செய்ய வைப்பது வழக்கம்.

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி,ஏற்கனவே பங்கேற்று இருந்தார். சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்தை, கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயத்துக்கு அழைத்து சென்று, இந்த நிகழ்ச்சியை நடத்தினார், பியர் கிரில்ஸ்.

அதே பந்திப்பூர் சரணாலயத்தில் இந்தி நடிகர் அக்‌ஷய் குமாரும், கிரில்சுடன் ‘’ INTO THE WILD’’ நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். கடந்த ஜனவரி மாதம் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது.

அடுத்த மாதம் 11 ஆம் தேதி அக்‌ஷய்குமார்- பியர் கிரில்ஸ் பங்கேற்ற சாகச நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகிறது.

முதலைகள் உலவும் காட்டில் அக்ஷய் குமாரும், பியர் கிரில்சும் வலம் வருவது, இருவரும் மரக்கிளையை பிடித்துக்கொண்டு தொங்குவது போன்ற முன்னோட்ட காட்சிகள், வெளியிடப்பட்டுள்ளன., இந்த ட்ரெய்லர், அக்‌ஷய் குமார்-கிரில்ஸ் நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

-பா.பாரதி.

You may have missed