Random image

பிரபல நடிகர் அல்வா வாசு மரணம்

மதுரை :

காமெடி நடிகர் ‘அல்வா’ வாசுவின் உடல்நிலை சில மாதங்களாக மோசமாக இருந்த நிலையில் நேற்று இரவு மதுரையில்  காலமானார்.. அவருக்கு வயது 57.

நடிகர் அல்வா வாசு 900 படங்களுக்கு மேல் நகைச்சுவை, மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில்  இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பிறகு நடிக்க ஆரம்பித்தார்.   ரஜினிகாந்த் உடன் இவர் அருணாச்சலம், சிவாஜி போன்ற படங்களீல் நடித்தார். அமைதிப்படை படத்தில் சத்யராஜூடன் நடித்தார். அப்படத்தில் ஒரு காட்சியில் அல்வா வாங்கி வருவது போல நடித்தததால் அல்வா வாசு என புகழ் பெற்ரார்.

இந்த நிலையில் இவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சொந்த ஊரான மதுரையில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக மீனாட்சி மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்தார்.   இந்நிலையில் அவர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும்,  இனி சிகிச்சை அளித்து பயனில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தினர். இதையடுத்து வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நேற்று இரவு அவர் மரணமடைந்தார்.

 

அவருக்கு அமுதா என்ற மனைவியும்  கிருஷ்ணஜெயந்திகா என் மகளும்  உள்ளார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.