பாஜக எம் பியும் நடிகருமான சன்னி தியோலுக்கு கொரோனா பாதிப்பு

ணாலி

பிரபல நடிகரும் பாஜக மக்களவை உறுப்பினருமான சன்னி தியோலுக்கு கொரோனா பதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் கதாநாயகனான சன்னி தியோல் மக்களவை உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார்.  இவர் பாஜகவைச் சேர்ந்தவர் ஆவார்.  இவரது தந்தை தர்மேந்திரா, சகோதரர்  பாபி தியோல் உள்ளிட்டோரும் பாலிவுட்டில் புகழ் பெற்ற நடிகர்கள் ஆவார்கள்.

உடல்நலக் குறை காரணமாகச் சன்னி தியோலுக்கு இமாசலப் பிரதேச மாநிலம் மணாலியில் உள்ள மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  அந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆனதாக மணாலி வட்டார மருத்துவ அதிகாரி ரஞ்சித் தாகுர் அறிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சன்னி தியோல் தற்போது இமாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ள மணாலியில் சிகிச்சை பெற்று வருகிறார்.