கார்த்தியின் ‘கைதி’ படத்தில் வில்லத்தனம் செய்து அதிரடி காட்டிய தனது நடிப்பால் பெரும் தாக்கத்தை ஏற்படுத் தினார் நடிகர் அர்ஜூன் தாஸ். இவர் அடுத்து விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.


லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தில் கார்த்திக்கு வில்லனாக அர்ஜூன் தாஸ் தனித்துவமான குரலால் ரசிகர்களைக் கவர்ந்தார். மீண்டும் லோ கேஷ் இயக்கிய தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தின் பங்கெடுத்த அர்ஜூன்தாஸ் அட்லீ தயாரிக்கும் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட அந்தகாரம் என்ற சஸ்பென்ஸ் த்ரில்லரில் படத்தில் நடிக்கிறார். இதில் நடிகர்கள் மீஷா கோஷல், ‘ஜீவா’ ரவி,’ ரெயில் ‘ரவி மற்றும் மகேந்திர முல்லத் ஆகியோரும் நடிக்கின்றனர்.
அர்ஜுன் தாஸ் நடித்த ‘அந்தகாரம்’ இந்த மாதம் செப்டம்பர் மாதம் பிரபலமான ஒடிடி தளத்தில் வெளியிட திட்டமிடப் பட்டுள்ளது. படம் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ விரைவில் வெளியாக உள்ளது.
இயக்குனர் அட்லீ வழங்க ’அந்தகாரம்’ படத்தை சுதன் சுந்தரம், ஜெயராம், பிரியா அட்லீ மற்றும் கே பூர்ணா சந்திரா ஆகியோர் தயாரிக்கின்றனர். சமீபத்தில் வெளியான இரண்டரை நிமிட டிரெய் லர், பூனை மற்றும் மவுஸ் சஸ்பென்ஸ் த்ரில்லராக வந்தது. அது ரசிகர்களி டையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.