நடிகர் அருண் விஜய் கைது!

சென்னை:

குடி போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய் சரண், விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

நடிகர் விஜயகுமாரின் மகன் அருண்விஜய். பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

arun
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல ஸ்டார் ஹோட்டலில்  நடிகை ராதிகா சரத்குமார் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் விஜயகுமாரின் மகனான, நடிகர் அருண் விஜய் பின்னர் வீடு திரும்பும்போது,  நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தின் எதிரே நின்று கொண்டிருந்த போலீசாரின் வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது. . இதில் போலீஸின் வாகனம் சேதம் அடைந்தது. போலீசார் அருண் விஜய்யிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர், அளவுக்கு அதிகமாக குடிபோதையில் காரை ஓட்டியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்களோ என எண்ணி அருண்விஜய் போலீஸ் நிலையத்திலிருந்து தப்பி ஓடினார்.

போலீசார் கெடு விதித்தை தொடர்ந்து அருண் விஜய் இன்று சரணடைந்தார்.