கமலை தொடர்ந்து விஜய் பாட்டுக்கு டிரெட்மில் மிஷுனில் நடனம்..

துருவங்கள் பதினாறு, எனை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களில் நடித்திருப் பவர் அஸ்வின். இவர் 2 நாட்களுக்கு முன் கமல்ஹாசன் ’அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் ஆடிய ’அண்ணாத்த ஆடுறா ஒத்திக்க’ பாடலுக்கு அச்சு அசலாக கமல்போல் நடைபயிற்சி செய்யும் டிரெட்மில் மிஷினில் நடனம் ஆடி வீடியோ பகிர்ந்தார். அதைக் கண்டு கமல்ஹாசன் அவருக்கு பாராட்டு தெரிவித்தார்.


நேற்று விஜய் பிறந்த தினத்தையொட்டி விஜய்போலவே அதே டிரெட்மில் மிஷினில் நடனம் ஆடி வீடியோ பகிர்ந்தார் அஸ்வின். ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெறும் ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு அவர் நடனம் ஆடியிருந்தார். அது ரசிகர்களிடம் பாராட்டு பெற்றது.