கலாட்டாவுக்கு மத்தியில் நடிகர் சங்க பொதுக்குழு!   ரஜினி, கமல் எஸ்கேப்!

 

டிகர் சங்க பொதுக் குழு கூட்டம் பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே இன்று மதியம் இரண்டு மணி முதல்  சென்னை தி. நகரில் உள்ள நடிகர் சங்க மைதானத்தில் நடந்து வருகிறது.

தலைவர் நாசர் தலைமையில் நடந்து வரும் கூட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர். கூட்டத்திற்கு முக்கிய நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாஸன் உள்ளிட்டோர் வரவில்லை.

ரஜினி - கமல்
ரஜினி – கமல்

இக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த சிலர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஆகவே அவர்களுக்கும் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

“உறுப்பினர் கார்டு இருந்தும் எங்களை அனுமதிக்கவில்லை” என்று அனுமதி மறுக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் சங்க பொறுப்பில் இருக்கும் விஷால் அணியினர், “சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள், பழைய கார்டை காண்பித்து உள்ளே வர முயற்சிக்கிறார்கள். அவர்களைத்தான் தடுத்தோம்” என்றார்கள்.

இந்த நிலையில்  உள்ளே நுழைய முயன்றவர்களை, காவல்துறையின் தடுத்து அப்புறப்படுத்தினர்.

சங்கக் கூட்டத்தில் இருந்து வெளியே வந்த சுந்தர்.சியிடம் கேட்டபோது, “கூட்டம் அமைதியாக நடந்துகொண்டிருக்கிறது.” என்றார்.

சமீபத்தில் கமலை உடல் நலம் விசாரிக்க ரஜினி சந்தித்தார். அப்போதே இருவரும், நடிகர் சங்க பொதுக்குழுவில் பிரச்சினை இருக்கும் என்று பேசியதாகவும், இருவரும் கலந்துகொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்ததாகவும் முன்பே சொல்லப்பட்து. அதற்கேற்ப இன்று நடைபெறும் பொதுக்குழுவுக்கு இவரும் வரவில்லை.

 

.

 

 

கார்ட்டூன் கேலரி