சென்னை:
டிகர் சங்கத்தில் ஊழல் நடைபெறுவதாக நடிகர் சங்க உறுப்பினர் வாராகி கூறும் குற்றச்சாட்டுகளுக்கு   அடிப்படை ஆதாரம் கிடையாது என்று நடிகர் சங்கத் தலைவர் விஷால் மறுத்துள்ளார்.
visal
நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளை கண்டித்து துணை நடிகர், நடிகைகள் சிலர் நேற்று காலை திடீரென தியாகராய நகரில் இயங்கி வரும் நடிகர் சங்க அலுவலகம் முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சங்க உறுப்பிர் வாராகி, ”புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நடிகர் சங்க நிர்வாகிகளின் நடவடிக்கைகள் வெளிப்படையாக இல்லை என்றார்.
மேலும்,  நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கான நிதி வசூலில் முறைகேடு செய்துள்ளனர், நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணியிலும் டெண்டர் விடாமல் அவர்கள் தன்னிச்சையாக கட்டுமான நிறுவனத்தை தேர்வு செய்துள்ளனர். இதை எல்லாம் எதிர்த்து விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம்” என்றார்.
இந்நிலையில், விஷால்  செய்தியாளர்களிடம் கூறும்போது, ”நடிகர் சங்கத்தில் ஊழல் நடந்துள்ளது என்று கூறப்படும் புகார்கள் அடிப்படை ஆதாரம் அற்றது என்றார்.
முன்பிருந்த நடிகர் சங்க நிர்வாகிகள் மீது நாங்கள் எழுப்பிய புகார்களுக்கு ஆதாரங்கள் எங்களிடம் இருந்தது. அதேபோல், இப்பொழுது எங்கள் மீது புகார் கூறுபவர்களும் ஆதாரத்தை வெளியிடலாமே? வெறுமனே குற்றசாட்டுகளை கூறக் கூடாது.
நாங்கள் புதிய நிர்வாகிகள் பதவியேற்ற பின், வெளிப்படையான நிர்வாகத்தை நடத்தி வருகிறோம். சங்க கணக்கு வழக்குகள் அனைத்தும் அலுவலகத்தில் உள்ளன. சங்க உறுப்பினர்கள் யாராக இருந்தாலும், எப்பொழுது வேண்டுமானாலும் அவற்றை எல்லாம் வந்து பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.