நடிகர் பாலஜி தனது மனைவியுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் போகிறார்?

சென்னை: காமெடி நடிகர் பாலஜி தனது மனைவியுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் போகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ்-2 நிகழ்ச்சி வரும் 17ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

சமீபத்தில் பிக் பாஸ் விளம்பரத்தில் நடிகர் கமல், “பிக்பாஸ் வீட்டுக்கு இவர் வந்தால் ரணகளமாகிடுமே” என்று கூறியதில் இருந்து அவர் யாரை கூறினார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

இந்நிலையில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் காமெடி நடிகர் பாலாஜி தனது மனைவியுடன் கலந்துகொள்ளப்போகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ய வந்துள்ளது. இந்நிகழ்ச்சியின் டி.ஆர்.பி.யை ஏற்ற யார் உதவுவார்கள் என்று யோசித்து யோசித்து ஆட்களை தேர்வு செய்கிறது பிக் பாஸ் டீம்.

பவர் ஸ்டார் சீனிவாசன், கவர்ச்சி (முன்னாள்) நடிகை மும்தாஜ் ஆகியோர் பிக்பாஸ் 2ல் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அதே போல காமெடி நடிகர் தாடி பாலாஜி தனது மனைவி நித்யாவுடன் கலந்துகொள்ள இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டிக்கொண்டதோடு, காவல் நிலையம் வரை சென்று புகார் அளித்தனர்.

“ இவர் வந்தால் வீடு ரணகளமாகிவிடும் என கமல் சொன்னது தாடி பாலாஜி, நித்யாவை தானோ? என்று கமல் கூறியது பாலாஜியைத்தானா என்ற யூகம் எழுந்துள்ளது.

கார்ட்டூன் கேலரி