ஷூவை கழட்ட சொல்லி உதவியாளரை அடித்த பிரபல நடிகர்

ஐதராபாத்:

ஷூ வை கழற்றுமாறு தனது உதவியாளரை தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராகவும், தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ-வாகவும் இருப்பவர் பாலகிருஷ்ணா.

இவர் தனது 102வது படத்தில் நடிக்க ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டிக்கு வந்தார். அப்போது உள்ளே பூஜை நடந்து கொண்டு இருந்தது.

அங்கு காரில் வந்து இறங்கிய பாலகிருஷ்ணா திடீரென தனது உதவியாளரை அடித்து தனது காலைக் காட்டினார். இதைப் புரிந்து கொண்ட அந்த நபர் குனிந்து அவரது ஷூவைக் கழற்றினார். பாலகிருஷ்ணா அடித்த காட்சியின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வளைதளங்களில் வைரலானது. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே சக நடிகர்களை கிண்டல் செய்வது, அவமரியாதையாக பேசுவது போன்ற குற்றச்சாட்டுக்களுக்கு ஆளானவர் பாலகிருஷ்ணா. இந்த நிலையில் உதவியாளரை பாலகிருஷ்ணா அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.