இந்த கொரோனா வைரஸ் நேரத்தில் பல்வேறு திரைத்துறை பிரபலங்களின் மரணங்கள் அனைவரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது .

இந்நிலையில் ஹாலிவுட்டில் பிரபல நடிகரான பென் க்ராஸ். காலமாகியிருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது.

பென் க்ராஸ் உடல்நல குறைவு காரணமாக அவர் இறந்துவிட்டதாக, அவரின் மகள் தெரிவித்துள்ளார். மூத்த நடிகரின் மரணம், ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chariots of Fire, Star Trek உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் இவர் .