நடிகை பாவனாவுக்கு திருமண நிச்சயம்!!

--

சென்னை:

கேரள நடிகை பாவனாவுக்கும் கன்னட பட தயாரிப்பாளர் நவீனுக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
மலையாளம், தமிழ் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை பாவனா.

நடிகை பாவனா திடீரென கன்னட திரைப்பட தயாரிப்பாளரான நவீன் என்பவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.

இவர்களது திருமண நிச்சயதார்த்த விழா சமீபத்தில் நடந்துள்ளது. ரகசியமாக நெருங்கியவர்கள், குடும்பத்தினர் மட்டும் கலந்துகொண்ட இந்த விழாவின் புகைப்படம் தற்போது சமூக வளைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.