திரைப்படமாகும் சந்திரபாபுவின் வாழ்க்கை

சென்னை

பிரபல நடிகர் மறைந்த சந்திரபாபுவின் வாழ்க்கைக் கதை திரைப்படமாக உள்ளது.

நகைச்சுவை நடிகர்களில் பலர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். அவர்களில் நடிகர் சந்திரபாபுவும் ஒருவர் ஆவார். நடிப்பு மட்டுமின்றி பாடல், ஆட்டம் என பன்முகத் திறமை கொண்ட சந்திரபாபுவின் நிஜ வாழ்க்கை அவ்வளவு நகைச்சுவையாக இருந்தது இல்லை. பல திருப்பங்களும் சோகங்களும் நிறைந்த ஒரு வாழ்க்கையை அவர் நடத்தி வந்தார்.

இயக்குனர் கே ராஜேஸ்வர் ஏற்கனவே அமரன், இதயத்தாமரை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கி உள்ளார். அது மட்டுமின்றி எழுத்தாளரான அவர் சீவலப்பேரி பாண்டி படத்தின் திரைக்கதை வசனத்தை எழுதி உள்ளார். அவர் சந்திரபாபுவின் வாழ்க்கை நிகழ்வுகளை வைத்து ஒரு புத்தகம் எழுதி உள்ளார்.

ஜே பி தெ லெஜண்ட் ஆஃப் சந்திரபாபு என பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த புத்தகம் பல வாசகர்களிடையே புகழ் பெற்றதாகும். அந்த புத்தகைத்தை அவரே தற்போது திரைப்படமாக இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தை ரஷ்யா தங்கப்பன், கே ராஜேஸ்வர், ஆர் வி சாமினாதன ஆகிய மூவர் தயாரிக்க உள்ளனர்.

இந்த படத்தின் தயாரிப்பு நிர்வாகத்தை குட்டி பத்மினி கவனிக்க உள்ளார். கதாநாயகன் சந்திரபாபுவாக நடிக்க முன்னணி நடிகர் ஒருவருடன் பேச்சு வார்த்தை நடைபெறுவதாக தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.