நியூஸ்பாண்ட்:

தாவது சோதனை என்றால், “கடவுளே, கடவுளே” என்று கதறுவார்கள். அந்த நடிகரோ,  “இப்படியும் இருப்பார்களா மனிதர்கள்” என்று தனது குடும்பத்தை நினைத்து, “குடும்பமே.. குடும்பமே” என்று கதறுகிறார்.

நடிகரின் மனைவியின் பணத்தாசை எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான். நடத்தும் கல்வி நிறுவனத்துக்கு வாடகை தருவதில் பிரச்சினை, ஊழியர்களுக்கு சம்பளம் தருவதில் தகராறு, கடை வாடகையும், கடன் வாங்கிய விவகாரமும் நீதிமன்றத்துக்குப் போய் சந்தி சிரித்தது.

நடிகருக்கு தெரியாமலேயே ஏகப்பட்ட கடன் வாங்கி விழிபிதுங்கி நிற்பதும், பிறகு நடிகர் பஞ்சாயத்து செய்து கடனை தீர்ப்பதும் வழக்கமான விசயம்தான்.

இப்போது இன்னொரு விசயம் வெளியாகி இருக்கிறது.

சில வருடங்களுக்கு முன் உடல் நலம் சரியில்லாமல் சென்னையில் உள்ள பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு வெளிநாட்டுக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

இரு மருத்துவமனைகளிலும் குடும்பத்தார் சிகிச்சை கட்டணத்தை செலுத்தவில்லை. மனையாரின் சாமர்த்தியம்.

இரு மருத்துவமனை நிர்வாகமும், “பெரிய மனிதராச்சே” என்று வாய்மூடி இருந்துவிட்டன.

வருடங்கள் ஓடிவிட்டன. மருத்துவமனை நிர்வாகி, நடிகரின் புதிய முயற்சிக்கு வாழ்த்து தெரிவிக்க வந்திருந்தார். பேச்சுவாக்கில், பில் செட்டில் செய்யப்படாதது குறித்தும் சொல்லியிருக்கிறார்.

அதிர்ந்துபோய்விட்டார் நடிகர்.

“இத்தனை வருடமா எனக்கு இந்த விசயமே தெரியாதே..” என்று பதறியவர், பிளாங்க் செக் கொடுத்து நிரப்பிக்கொள்ளுங்கள் என்றாராம்.

இங்கேயே இப்படி என்றால், வெளிநாட்டு சிகிச்சையின்போதும் அப்படித்தான் நடந்திருக்கும் என்பதை யூகித்தவர், அது குறித்து அங்கு விசாரித்திருக்கிறார். அங்கும் பில் செட்டில் செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. அங்குள்ள தனது நண்பர் மூலம்,  அந்த வெளிநாட்டு மருத்துவமனக்கும் பில் செட்டில் செய்தார்.

பிறகு தனது மனையாள் மற்றும்  பிள்ளைகளை அழைத்து, ஏன் இப்படி அல்பமாக நடந்துகொள்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள். வழக்கம்போல் அவர்கள் எந்த ரெஸ்பான்ஸும் அளிக்கவில்லையாம்.

தற்போது நடிகர், “குடும்பமே.. குடும்பமே! இப்படி வீட்டையே என்னால மாத்த முடியல.. நாட்டை எப்படி மாத்துவேன்” என்று கதறுகிறாராம்.