மதுரை ஐகோர்ட்டு கிளையில் நடிகர் தனுஷ் நேரில் ஆஜர்!

மதுரை:

துரையை சேர்ந்த கதிரேசன் தம்பதியினர் நடிகர் தனுஷை தனது மகன் என்று உரிமை கொண்டாடி வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அந்த வழக்கு தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவுபடி தனுஷ்  இன்று நேரில் ஆஜரானார்.

மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினிர், தங்களது மூத்த மகன்தான் நடிகர் தனுஷ் என்று உரிமை கொண்டாடி வருகின்றனர்.  தம்பதி நடிகர் தனுஷ் தங்களின் மூத்த மகன் என உரிமை கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்த வழக்கு மதுரை   மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த விசாரணையின்போது,  நடிகர் தனுஷின் கல்விச் சான்றிதழ்கள் தனுஷ் தரப்பிலும், அவரை மகனாக உரிமை கோரும் கதிரேசன் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்டன. இதில் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட தனுஷின் பத்தாவது வகுப்பு பள்ளி மாற்றுச் சான்றிதழில் அங்க மச்ச அடையாளங்கள் குறிப்பிடப்படவில்லை. கதிரேசன் தரப்பில் தாக்கல் செய்த பள்ளி மாற்றுச் சான்றிதழில் அங்க மச்ச அடையாளங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும் அடுத்த விசாரணயின்போது,  கதிரேசன்  தாக்கல் செய்துள்ள  பள்ளி மாற்றுச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டு உள்ள  அங்க அடையாளங்கள் நடிகர் தனுஷின் உடலில் உள்ளதா? என்பதை கண்டறிய வேண்டியது அவசியம், அதற்காக  நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் அங்க அடையாளங்கள் சரிபார்ப்புக்காக ஆஜராக வேண்டும் என நீதிபதி சொக்கலிங்கம் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து இன்று நடிகர் தனுஷ்  நீதிமன்றத்தில் ஆஜரானார். விசாரணையின்போது, நடிகர் தனுஷின் அங்க அடையாளங்களை  மருத்துவர் சரிபார்த்து இன்றே அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தர விட்டது.

மேலும் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை மார்ச் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.