அனிருத்துக்கு கொட்டுவைத்த தனுஷ்!

டிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ரஜினியின் உறவுக்கார இளைஞரான அனிருத். அந்தப் படத்தில் தனுஷை “ஒய் திஸ் கொலவெறி..” பாடலுக்கு பாட வைத்தார். பாடல் செம ஹிட் ஆக,  தமிழை கடந்தும் பிரபலமானார்கள் இருவரும்.

இதையடுத்து இருவரும் நெருக்கமான நண்பர்கள் ஆனார்கள். இருவரும்   சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

தான் தயாரித்த எதிர்நீச்சல்,  தயாரித்து நடித்த வேலையில்லா பட்டதாரி, மாரி ஆகிய படங்களுக்கு அனிருத்துக்கு வாய்ப்பு அளித்தார் தனுஷ். பாடல்களும் ஹட் ஆகின.

ஆனால் யார் கண் பட்டதோ.. இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. பொது இடங்களில் பார்த்தால் கூட பேசிக்கொள்வதில்லை. ட்விட்டரில் அனிருத்தை ஃபாலோ செய்வதை நிறுத்தினார் தனுஷ்.

தனுஷ் தனது மாரி 2 படத்துக்கு யுவன் சங்கர் ராஜாவை இசையமைக்க வைத்தார்.

தனக்கு பிடிக்கா சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோருடன் அனிருத் நட்பாக இருப்பதுதான் தனுஷுக்கு பிடிக்கவில்லை என்று கோலிவிட்டில் பேசிக்கொள்கிறார்கள்.

இருவருக்கிடையேயான விலகல், நடிகர் ரஜினிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. ஒருபக்கம் மருமகன் தனுஷ்.. இன்னொரு பக்கம் உறவுக்கார இளைஞர் அனிருத்.

ஆகவே தனது பேட்ட படத்துக்கு அனிருத்தை இசையமைக்க வைத்த ரஜினி, அதல் ஒரு பாடலை தனுஷை எழுத வைத்தார்.  இதன் மூலமாக இருவரும் மீண்டும் நண்பர்களாகிவிடுவார்கள் என்று எதிர்பார்த்தார்.

ஆனால் அதற்கெல்லாம் நான் தயாரில்லை என்று சிலிர்த்தெழுந்திருக்கிறார் தனுஷ்.

அவரது மாரி 2 படம் வரும் 21ம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது.

இதில் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி, டொவினோ தாமஸ், இயக்குநர் பாலாஜி மோகன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், “ நான் பிரமித்து பார்த்த ஒரு நட்சத்திரம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாதான். நான் நடித்த முதல் படம், “துள்ளுவதோ இளமை”. நான் மட்டுமல்ல அதில் நடித்த மற்ற பலரும், இயக்கிய செல்வராகவனும் பதிது.  ஆள் அட்ரஸ் தெரியாத 6 புதுமுகங்கள் இணைந்து நடித்த படம் அது.

அந்தப்படத்திற்கு அடையாளமே தந்ததே யுவனின் இசை தான். அந்தப்படம் ஓடவில்லை என்றால் நிஜமாகவே நாங்கள் நடுத்தெருவில் தான் நின்றிருப்போம். அந்த சூழ்நிலையில் தான் அப்போது நாங்கள் இருந்தோம். துள்ளுவதோ இளமை மற்றும் காதல் கொண்டேன் படங்கள் மிகப்பெரிய ஹிட்டாக யுவன் இசை தான் காரணம். அந்த அஸ்திவாரத்தைப் போட்டுக் கொடுத்ததில் யுவனுக்கு பெரும் பங்கு இருக்கிறது. அடுத்து அவர் அஜித்தின் படத்திற்கு இசையமைக்க இருப்பதை நினைத்து பெரு மகிழ்ச்சி அடைகிறேன்” என்று நெகிழ்ந்துபோய் பேசினார்.

இது வரை ஓகே தான். அதன் பிறகுதான் மறைமுகமாக அனிருத்துக்கு குட்டு வைத்தார்.

“சிலபேர்  தப்பா நெனச்சாலும் பரவாயில்லை. இருபது வருசங்களுக்கு மேலாக எதிர்ல இருக்கும் இசையமைப்பாளர்களின் பெயர் மாறிக் கொண்டே இருக்கிறது. ஆனால் யுவனின் பெயர் மட்டும் அப்படியே இருக்கிறது” என்றார்.

இதுதான் அனிருத்தை மனதில் வைத்து மறைமுகமாக குட்டியிருக்கிரார் என்று பேசுகிறார்கள் கோலிவுட்டில்.