புதுமுக இயக்குனர் ‘முண்டாசு பட்டி’ ராம்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் தனுஷ்

புதுமுக இயக்குனரான  ‘முண்டாசு பட்டி’ பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளது. இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க உள்ளார்.

ஏற்கனவே கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், தனுஷின் வேலையில்லா பட்டதாரி படம் வெளியாகி பெரும் வெற்றியடைந்த நிலையில், மேலும் நடிகர் தனுஷின் 3 படங்களை தயாரிக்க தாணு திட்டமிட்டு உள்ளார்.

இதில் ஒரு படத்தை பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. மற்றொரு படத்தை முண்டாசு பட்டி பட இயக்குனர் ராம்குமார் இயக்க உள்ளார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்க இருக்கிறது.

தற்போது இயக்குனர் ராம்குமார் இயக்கி வரும் விஷால், அமலா பால் நடித்துள்ள ராட்சன் அடுத்த மாதம் 5ந்தேதி வெளியாக உள்ளது.

தற்போது நடிகர் தனுஷ் நடித்துள்ள வட சென்னை படம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. அந்த படம் வெளியான பிறகு, அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி