வரலட்சுமி நடிக்கும் ‘வெல்வெட் நகரம்’ படத்தின் டிரெய்லர் வெளியானது

--

டிகர் சரத்குமார் மகள் வரலட்சுமி நடிக்கும் ‘வெல்வெட் நகரம்’ படத்தின் டிரெய்லர்  வெளியிடப்பட்டு உள்ளது. நடிகர் தனுஷ் வெளியிட்டார்.

பிரபல இயக்குனர் மனோஜ் குமார் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் “வெல்வெட் நகரம்”. இந்த படத்தில் கஸ்தூரி ஷங்கர், ரமேஷ் திலக், திரைப்பட பாடகி மாளவிகா சுந்தர், சந்தோஷ் கிருஷ்ணா, மதுன் குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். பாடல்கள் கபர் வாசுகி எழுதியுள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  ஜூன் 6ம் தேதி  நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெறு வருகிறது. விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில், இன்று இந்த படத்தின் ட்ரையிலர் வெளியிடப்பட்டது. நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விஜய்யின் ‘சர்கார்’ படத்திற்கு பிறகு நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் கைவசம் விமலின் ‘கன்னி ராசி’, பிரியதர்ஷினியின் ‘சக்தி’, வினய்யின் ‘அம்மாயி’, தனுஷின் ‘மாரி 2′, ஜெய்யின் ‘நீயா 2′, சரத்குமாரின் ‘பாம்பன்’, மனோஜ்குமார் நடராஜனின் ‘வெல்வெட் நகரம்’, வைபவ்வின் ‘காட்டேரி’, JK-வின் ‘ராஜபார்வை’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது.

இதில் ‘வெல்வெட் நகரம்’ படத்தில் வரலக்ஷ்மி பத்திரிக்கையாளராக வலம் வரவுள்ளாராம். . ‘மேக்கர்ஸ் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் அருண் கார்த்திக் தயாரித்துள்ளார். அச்சு ராஜாமணி இசையமைத்துள்ள இதற்கு பகத் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், ‘அருவி’ புகழ் ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

டிரெய்லரை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்…

https://www.youtube.com/watch?time_continue=3&v=ShEL10EOy8c