கன்னட நடிகர் துருவா சார்ஜா- மனைவிக்கு கொரோனா.. மருத்துவமனையில் சிகிச்சை..

மிழ் பட  நடிகர் அர்ஜூனின் சகோதரர் துருவா சார்ஜா. இவர் கன்னடத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஆவார். அட்டுரி, பஹதுர், பஹர்ஜரி போன்ற கன்னட படங்களில் நடித்திருப்பதுடன் அடுத்து விஜய் மில்டன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். துருவா வுக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.


இதுபற்றி டிவிட்டர் பக்கத்தில்,’எனக்கும் என் மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்ததில் தொற்றுக்கான லேசான அறிகுறிகள் தெரிந்தது. உடன் இருவரும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுகிறோம். விரைவில் குணம் அடைந்து திரும்புவேன். சமீபத்தில் எங்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் உடனே கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். எல்லோரும் பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டிருக்கிறார் துருவா சார்ஜா.
துருவா சார்ஜாவின் சகோதரர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த 2 மாதத்துக்கு முன்பு மாரடைப்பில் மரணம் அடைந்தார்.