சர்ச்சைகள் ஓய்ந்த பின் சங்கத்தில் இணைவேன் : நடிகர் திலீப்

கொச்சி

ன்னைப் பற்றிய சர்ச்சைகள் ஓய்ந்து தாம் நிரபராதி என நிரூபிக்கப்பட்ட பின் மலையாள நடிகர் சங்கத்தில் சேருவேன் என நடிகர் திலீப் தெரிவித்துள்ளார்.

பிரபல மலையாள நடிகையை காரில் கடத்தி பலாத்காரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் சம்மந்தம் உள்ளதாக கூறி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.   சுமார் 85 நாட்கள் சிறையில் இருந்த அவர் அதன் பிறகு ஜாமினில் வெளி வந்தார்.   திலிப் கைது செய்யப்பட்டதால்  அம்மா என் அழைக்கப்படும் நடிகர் சங்கத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

தற்போது அவர் மீண்டும் இணைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டதால் மலையாள நடிகர் சங்கத்தில் பெரும் சர்ச்சை உண்டாகியது.   அவர் கைது செய்த போது பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக தொடங்கப்பட்ட மகளிர் அணி திலீப் இணைக்கப்படுவதை கடுமையாக எதிர்த்தது.   அத்துடன் பாதிக்கப்பட்டவர் உட்பட நான்கு நடிகைகள் சங்கத்தில் இருந்து விலகினார்கள்.

இந்நிலையில் அம்மா சங்கத்தில் பொதுச் செயலாளர் எடவேளா பாபுவுக்கு திலீப் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.  அதில், “என்னால் சங்கத்துக்கு அவப்பெயர் உண்டாவதைக் கண்டு நான் வருந்துகிறேன்.    என்னை தேவை இல்லாமல் அந்த வழக்கில் சேர்த்துள்ளனர்.  எனக்கும் அந்த நிகழ்வுக்கும் சம்மந்தம் இல்லை.   இந்த சர்ச்சைகள் ஓய்ந்து நான் நிரபராதி என நிரூபிக்கப் படும் வரை நான் சங்கத்தில் இணைய மாட்டேன்

நான் மக்களுக்கும், எனது திரையுலக நண்பர்களுக்கு நிரபராதி என நிரூபிக்கப்பட்ட பின் சங்கத்தில் இணைகிறேன்.   சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  என்னை மீண்டும் சங்கத்தில் இணைக்க வேண்டும் என முடிவு எடுத்த பொதுக்குழு உறுப்பினர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Actor dileep said he will join AMMA only after he was proved innocent
-=-