டில்லி:

தீபாவளிக்கு ரிலீஸ் ஆன விஜய் நடித்த மெர்சல் படத்தில் இடம்பெற்றிருந்த ஜிஎஸ்டி தொடர்பான வசனம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த விவக £ரம் தமிழகத்தில் மட்டுமன்றி நாடு முழுவதும் பரவ தொடங்கிவிட்டது. தமிழக செய்தி சேனல்கள் மட்டுமின்றி வட இந்திய சேனல்களிலும் இது விவாத பொருளாக மாறிவிட்டது.

இந்த வகையில் டைம்ஸ் நவ் சேனலில் பாஜக செய்தி தொடர்பாளர் நரசிம்மராவ் மெர்சல் தெ £டர்பான விவாத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘எந்த விஷயமானாலும் பெரும்பாலான சினிமா நட்சத்திரங்களுக்கு குறைவான நுண்ணறிவு எண்ணிக்கை தான் உள்ளது. பொது அறிவும் குறைவாக தான் உள்ளது’’ என்றார்.

இவரது இந்த கருத்துக்கு நடிகரும், திரைப்பட இயக்குனருமான ஃபர்கான் அக்தர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ என்ன தைரியம் சார் உங்களுக்கு?. அனைத்து நிலை திரைத் துறையினரையும் அவர் எப்படி நினைக்கிறார் என்பது தான் இது..’’ என்று ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.

இவரது டுவிட்டுக்கு நரசிம்ம ரான் டுவிட்டரில் பதிலளித்துள்ளார். அதில்,‘‘ஃபர்கான் ஜி கருத்தை கூறுவது என்பது தைரியம் அல்ல. நட்சத்திரங்கள் அவர்களது பணிக்காக மதிக்கப்படுகிறார்கள். விமர்சனங்களை கடுமையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. வெறுப்புத்தன்மை வேண்டாமே’’ என்று தெரிவித்துள்ளார்.

ஃபர்கானின் பதிவுக்கு டுவிட்டர் பயன்படுத்தும் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘‘அனைவருக்கும் என்பதற்கும் பெரும்பாலானவர்களுக்கு என்பதற்கும் உங்களுக்கு வேறுபாடு தெரியவில்லை. நீங்கள் ஒருவர் தான் அதை சரி என்று நிரூபித்துள்ளீர்கள்’’ என்று தெரிவித்துள்ள £ர்.

இவருக்கு ஃபர்கால் பதில் கூறுகையில், ‘‘இங்கு பெரும்பாலானவர்களா அல்லது அனைவருமா என்பது பிரச்னை கிடையாது. திரை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மீதான எண்ணத்தின் பிரதிபலிப்பு தான் இது’’ என்று தெரிவித்துள்ளார்.

மெர்சல் திரைப்பட குழுவினருக்கு பாஜக கொடுக்கும் நெருக்கடிக்கு ராகுல்காந்தி, ஸ்டாலின், கமல்ஹாசன் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கோடம்பாக்கத்தில் ஆரம்பித்த மெர்சல் பிரச்னை தற்போது கோலிவுட் வரை எதிரொலிக்க தொடங்கிவிட்டது.