உத்தரப்பிரதேச அரசின் பசு பாதுகாப்பு அமைப்பின் தூதராக நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான பா ஹேமமாலினி நியமிக்கப்பட்டுள்ளார்.

hemamalini

பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்கவும், அவற்றை பாதுகாக்கவும் உத்திரப்பிரதேச அரசு கவ் சேவா என்ற பசு பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. தனி அதிகாரம் கொண்ட இந்த அமைப்பிற்கு மாநில பட்ஜெட்டில் இருந்து சுமார் ரூ.647 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கவ் சேவா அமைப்பிம் பிரச்சார தூதராக நடிகையும், மதுரா தொகுதியின் நாடாளுமன்ற உறுபினராக உள்ள ஹேமமாலினியை மாநில அரசு நியமனம் செய்துள்ளது. பசு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஹேமமாலினி ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்திரப்பிரதேச அரசின் நித கௌரவத்தை ஏற்றுக் கொண்ட ஹேமமாலினி பசு பாதுகாப்பு தொடர்பாக தனது திட்டங்களை அந்த அமைப்பின் தலைவருக்கு கடிதமாக எழுதியுள்ளார்.