படப்பிடிப்பில் நடந்த விபத்தில் உயிர் தப்பினார் ஜாக்கிசான்..

சீன படங்களில் நடிக்கத்  சிறுவயதிலிருந்து  நடிக்கத்  தொடங்கியவர் ஜாக்கி சான். படிப்படியாக வளர்ந்துடன் தனது திறமையையும். துணிச்சலையும் வளர்தார். உயிரைப்பணயம் வைத்து சண்டைக் காட்சிகளில் நடிப்பார். இதனால் அவரது உடலில் அடிபடாதே இடமே கிடையாது . பலமுறை எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றிருக் கிறார். அப்போதும் டாக்டர்களின் அறிவுரையை மீறி அதிரடி சண்டை காட்சி களில் நடித்தார்.


ஜாக்கிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். டிரங்கன் மாஸ்டர்2 , மிஸ்டர் நைஸ் கய், ஹு ஆம் ஐ போன்ற பல படங்கள் அவரை பிரபலமாக்கியது.
தற்போது ’வான்கார்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். உளவாளி பின்னணி யில் திரில்லர் படமாக இது உருவாகிறது. ஸ்டேன்லி டோங் இயக்குகிறார். சீன நடிகை மியா முகி , யங் யங், ஐ லுன் உள்பட பலர் இதில் நடிக்கின்றனர்.
கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட் டிருந்த படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. எதிர்களிடமிருந்து தப்பிக்க காதலியுடன் ஜாக்கி தண்ணீரில் வேகமாச் செல்லும் ஜெட் ஸ்கீ எனும் ஸ்கூட்டரில் வேகமாக செல்லும் காட்சி படமாக்கப்பட்டது. ஒரு திருப்பத்தில் ஸ்கூட்டரை ஜாக்கி திருப்பியபோது அங்கு இருந்த பாறை மீது மோதியது. எதிர்பாராத இந்த சம்வத்தால் ஆற்றுக்குள் ஜெட் ஸ்கீ கவிழ்ந்தது. ஜாக்கிசான், நாயகி மியா நீரில் மூழ்கினர். விபத்தைக்கண்டு படக் குழு பதறியது. இருவரைம் காப்பாற்ற அங்கிருந்த செக்யுரிட்டிகள் ஆற்றில் குதித்து தேடினர்.
சில நிமிடங்களில் மியா மட்டும் மீண்டு வந்தார். ஜாக்கியை காணவில்லை. ஆற்றில் மூழ்கிய வேகத்தில் உள்ளுக்குள் ளேயே நீரோட்டதில் அடித்துச் செல்லப் பட்டார். 45 நிமிடங்கள் வரை அவரைக் காணாததால் பதறிப்போனது படக் குழு. இயக்குனர் அழத் தொடங்கிவிட்டார்.
பின்னர் ஜாக்கியை செக்யூரிட்டிகள் மீட்டு வந்தனர். அதன்பிறகே படக்குழுவினர் நிம்மதி அடைந்தனர். நீருக்குள் மூழ்கிய தன்னை ’தெய்வீக சக்திதான் காப்பாற் றியது’ என்றார் ஜாக்கி சான்.

கார்ட்டூன் கேலரி