நடிகர் ஜெய் சைதாப்பேட்ட நீதிமன்றம் வந்தார்.!

சென்னை

பிடி வாரண்ட் பிறப்பிக்கப் பட்டு தேடப்பட்டு வந்த நடிகர் ஜெய் இன்று சைதை நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.

கடந்த 21ஆம் தேதி போதையில் நண்பர்களுடன் ஒரு காரை ஓட்டி வந்த நடிகர் ஜெய் அடையாறு மேம்பால சுவற்றில் மோதி விபத்தை உண்டாக்கினார்.  அவர் மீதுபோலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  கடந்த 3 ஆம் தேதி சைதை நீதிமன்றத்துக்கு வந்த ஜெய் குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக் கொண்டார்.  அதன் பின் நடந்த விசாரணைக்கு அவர் வரவில்லை.

இதற்காக அவரை 10ஆம் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜர் படுத்த வேண்டும் என நிதீபதி பிடி வாரண்ட் பிறபித்தார்.   அதனால் அடையாறில் உள்ள நடிகர் ஜெய் வீட்டுக்கு போலிசார் சென்றனர்.  அவர் அங்கு இல்லை.  படப்பிடிப்புக்காக வேறு எங்கோ சென்று விட்டதாகவும், எந்த இடம் என தெரியாது எனவும் அவரது வீட்டார் தெரிவித்தனர்.

நேற்று சைதை நீதிமன்றத்தில் ஜெய் ஆஜராவார் என செய்திகள் வந்தன.   ஆனால் அவர் வரவில்லை.   போலீசார் அவரைக் கது செய்து 10ஆம் தேதிக்குள் நீதிமன்றம் கொணர தேவையான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.  இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திடீர் என ஜெய் ஆஜர் ஆனார்.   அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கார்ட்டூன் கேலரி