மீண்டும் போக்குவரத்து காவலர்களிடம் சிக்கிய நடிகர் ஜெய்

சென்னை

சாலை விதிகளை மீறி நடந்ததால் நடிகர் ஜெய் போக்குவரத்து காவாலர்களிடம் சிக்கி உள்ளார்.

தமிழ் திரை உலகில் மிகவும் புகழ்பெற்ற நடிகர் ஜெய்.   இவர் சென்னை28, சுப்ரமணியபுரம், மங்காத்தா, திருமணம் என்னும் ஒரு நிக்கா உள்ளிட்ட பல  படங்களில் கதாநாயகனாக நடித்தவர்.  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அடையாறில் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதால் வழக்கு பதியப்பட்டது.    அவர் விசாரணைக்கு வராததால் சைதை நீதிமன்றம் இவருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்தது.

அதைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.  அவருக்கு அப்போது ரூ. 5200 அபராதமும், ஆறு மாதங்களுக்கு ஓட்டுனர் உரிமம் ரத்தும் தண்டனையாக விதிக்கப்பட்டது.   நேற்று அடையாறு பகுதியில் ஜெய் தனது சொகுசுக் காரில் சென்றுள்ளார்.   அப்போது அவர் அதிக சப்தம் எழுப்பும் ஹாரனை காரில் பொருத்தி உள்ளதற்காக அவர் மீண்டும் போக்குவரத்து துறை காவலர்களிடம் சிக்கி உள்ளார்

தவறை ஒப்புக் கொண்ட ஜெய் அந்த ஹாரன்களை உடனடியாக நீக்குவதாக உத்திரவாதம் அளித்ததால் காவலர்கள் அவரை எச்சரிக்கை செய்து அனுப்பி உள்ளனர்.   தற்போது அதை ஒட்டி அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை யாரும் உபயோகப்படுத்த வேண்டாம் என வேண்டுகோளுடன் வீடியோ ஒன்றை நடிகர் ஜெய் பதிவிட்டுள்ள்ளார்.