நடிகர் கமல் தவறி விழுந்து காயம்: அறுவை சிகிச்சை நடந்தது

சென்னை:

டியில் தவறி விழுந்ததால், நடிகர் கமல் ஹாசனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை  செய்யப்பட்டது.

 நேற்று இரவு கமல், தனது ஆழ்வார்பேட்டை அலுவலக மாடிப்படியிலிருந்து தவறி விழுந்தார். இதில்  அவருக்கு கால் மற்றும் முதுகில் பலமான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

1

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கமலுக்கு கால் மூட்டு மற்றும் முதுகு தண்டுவட பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறினர். இதனையடுத்து உடனடியாக  அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

பூரண குணமடைய இரண்டு வாரங்கள் ஆகும். ஆகவே, அதுவரை அவர் முழு ஓய்வில் இருக்க வேண்டும்” என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.