நடிகர் கமல் அரசியல் சுற்றுப் பயண விபரம் வெளியீடு…21ம் தேதி கொடி அறிமுகம்

சென்னை:

நடிகர் கமல் தனது அரசியல் பயணத்தை வரும் 21-ம் தேதி முதல் தொடங்குவதாக அறிவித்துள்ளார். இதற்காக பிரபல தலைவர்களை அவர் சந்தித்து பேசி வருகிறார். இந்நிலையில் 21ம் தேதி அவரது சுற்றுப்பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

21-ம் தேதி

#காலை 7.45 மணிக்கு அப்துல்கலாம் இல்லம் வருகை.

# காலை 8.15 மணிக்கு அப்துல்கலாம் பள்ளி.

# காலை 8.50 மணிக்கு கணேஷ் மகாலில் மீனவர்கள் சந்திப்பு.

# காலை 11.10 மணிக்கு அப்துல்கலாம் நினைவிடம்.

# காலை 11.20 மணிக்கு மதுரை நோக்கி பயணம்.

# நண்பகல் 12.30 மணிக்கு ராமநாதபுரம் அரண்மனை நுழைவுவாயிலில் பொது மக்கள் சந்திப்பு.

# மதியம் 2.30 மணிக்கு பரமக்குடி லேனா மகால் முன்பு பொதுமக்கள் சந்திப்பு.

# பிற்பகல் 3 மணிக்கு மானாமதுரையில் மக்கள் சந்திப்பு.

# மாலை 5 மணிக்கு மதுரை ஒத்தக்கடை மைதானம் வருகை.

# மாலை 6 மணிக்கு அரசியல் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி.

# மாலை 6.30 மணிக்கு மக்கள் சந்திப்பு.

# இரவு 8.10 மணி முதல் 9 மணி வரை சொற்பொழிவு.

இவ்வாறு கமல் சுற்றுப் பயண விபரம் வெளியிடப்பட்டுள்ளது.