ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதாக, நடிகை த்ரிஷா மீது, ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள்.

சிவகங்கை பகுதியில் நேற்று நடைபெற்ற திரிஷாவின் கர்ஜனை படப்பிடிப்பும் ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், த்ரிஷா எய்ட்ஸ் நோயால் மரணமடைந்துவிட்டதாக வடிவமக்கப்பட்ட அஞ்சலி போஸ்டர் ஒன்று சமூகவலை தளங்களில் நேற்று வைரலானது.

இதனால் மனம் நொந்த த்ரிஷா, “நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவள் அல்ல. தவிர பெண்களை அபாச வார்த்தைகளால் பேசுபவர்கள், தமிழ்க் கலாச்சாரம் பெற்றி பேச வெட்கப்பட வேண்டும்” என்று ட்விட் செய்துதனது ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.

இந்த ட்விட்டுக்கும் கடும் விமர்சனங்களை செய்துவருகிறார்கள், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கலில் சிலர். இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன், “ஜல்லிக்கட்டு தேவை. அதே நேரம், த்ரிஷாவை கடுமையாக விமர்சிப்பது தவறு” என்றுட்விட்டியிருக்கிறார்.

அவரது பதிவில், “பாவம் அறியாத பெண் தெரியாமல் செய்து விட்டார்.கன்னியும் வாழ, காளையும் வாழ வழி செய்வோம். நடிகை த்ரிஷாவை காயப்படுத்துவதை நிறுத்தங்கள். அவர்க்கும் நமக்கும் உள்ள வேற்றுமை ஊரறியட்டும், தர்க்கம் தொடர்க நேசத்துடன் என்று தனது பதிவிட்டுள்ளார்.