பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை கொண்டு வந்தவர் கருணாநிதி: நடிகர் கார்த்தி புகழாரம்

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி, பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை கொண்டு வந்தவர் என்றும்,   பெரியார் சொன்ன வற்றை எல்லாம் தனது ஆட்சியில் நடைமுறைப்படுத்தியவர்  கருணாநிதி என்றும் புகழாரம் சூட்டினார்.

கருணாநிதி சமாதியில் நடிகர் கார்த்தி அஞ்சலி

திமுக தலைவர் கருணாநிதி வயது முதிர்வு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டி லேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  கடந்த (ஜூலை)  மாதம் 27ந்தேதி கடும் காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்று காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையிய்ல உள்ள  காவேரி  மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். 10 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த 7ந்தேதி மலை 6.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது உடல் கடந்த 8ந்தேதி  உடல் அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

அண்ணா சதுக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள கருணாநிதியின் சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு உள்ளது. அவரது சமாதியில் தினசரி  ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று  3 வது நாளாக திமுக தொண்டர் களும் பொதுமக்களும், பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், படப்பிடிப்பு காரணமாக வெளிநாட்டில் இருந்த நடிகர் கார்த்தி சென்னை திரும்பியதும், இன்று கருணாநிதியின் சமாதிக்கு வந்து மலர் அஞ்சலி செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, தமிழகம் முழுவதும் இருந்தும், சிறிய கிராமங்களில் இருந்தும் மக்கள் கூட்டம் கலைஞர் நினைவிடத்துக்கு வந்து கொண்டே இருப்பது அவரது சாதனையை காட்டுகிறது.  பெரியார் சொன்னவற்றை எல்லாம் ஆட்சியை அமைத்து செய்து காட்டியவர் கருணாநிதி. இங்கு வரும் ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் கருணாநிதியால் பலன் அடைந்திருப்பவராக இருப்பார்கள்.

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உள்ளிட்ட பல சமூக சீர்திருத்தங்களை செய்தவர் அவர். கருணாநிதியின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.