மோடியை கிண்டல் செய்த பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர்

சென்னை

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் கருணாகரன் தனது டிவிட்டர் பதிவில் பிரதமர் மோடியை கிண்டல் செய்துள்ளார்.

பிரதமர் மோடி லண்டனில் இந்திய வம்சாவழியினர்  இடையே உரை ஆற்றினார்.   அப்போது நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் பற்றியும் தனது கருத்துக்களை கூறினார்.   பேச்சின் நடுவில் “இந்தியாவில் வாழும் 125 கோடி மக்களும் எனது குடும்பத்தினரே”  என கூறினார்.

பிரதமர் அலுவலகத்தின் அதிகார பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அவருடைய இந்தப் பேச்சு வெளியாகியது.   இதற்கு பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் கருணாகரன் பதில் அளித்துள்ளா.   அவர் தனது பதில், “தயவு செய்து இதில் என்னையும் என் குடும்பத்தையும் விட்டுவிடுங்கள்.   மன்னிக்கவும்.  வணக்கம்”  எனக் கிண்டலாக  குறிப்பிட்டுள்ளார்.

கருணாரனின் இந்த பதிலுக்கு பலரும் வரவேற்பு அளித்துள்ளனர்.