தேவர் மகன் படப்பெயர் மாற்ற வேண்டுமா? டாக்டர் கிருஷ்ணசாமிக்கு கருணாஸ் கண்டனம்

சென்னை:

டிகர் கமல்ஹாசன், ஏற்கனவே நடித்துள்ள தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் தேவர் மகன்2 என்ற பெயரில் தயாரிக்க இருப்பதாக அறிவித்திருந்தார். இதற்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், கருணாஸ் கிருஷ்ணசாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ‘தேவர் மகன்’ எனப் பெயரிட்டால் படம் முடங்கும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை. விடுத்திருந்தார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் 1992-ம் ஆண்டு பரதன் இயக்கத்தில் சிவாஜி, கவுதமி, ரேவதி, வடிவேலு, நாசர் உள்பட நட்சத்திர பட்டாங்களுடன் தேவர் மகன் என்ற படத்தை தயாரித் திருந்தார். இந்த படம் வெற்றிப்படமாக ஓடிய நிலையில், தேவர் மகன் படத்தின் 2ம் பாகம் எடுக்க இருப்பதாக கடந்த மாதம் நாமக்கலில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார்.  ‘தேவர் மகன் 2’வுக்காக கதையை கமல் எழுதி வருவதாகவும்  தகவல் வெளியானது.

இந்த நிலையில், தேவர் மகன்2 என்ற தலைப்பில் படம் எடுக்கக்கூடாது என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் போர்க்கொடி தூக்கி உள்ளார். ஏற்கனவே தேவர் மகன் என்ற படம் காரணமாக  தேவேந்திரகுல வேளாள மக்கள் பாதிக்கப்பட்டதாகவும்,  தயவு கூர்ந்து இனியொரு விஷப் பரீட்சையில் ஈடுபடாதீர்கள். என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உங்களது கொள்கைப்படி மைய அரசியலைக் கையாள வேண்டுமென்றால், மறைக்கப்பட்ட அடையாளத்தை மீட்கப் போராடும் தேவேந்திரகுல வேளாளர்களை அடையாளப்படுத்தி தேவேந்திரர் மகன் என்ற பெயரில் படம் எடுங்கள், அது ஓடும்; ஆனால்  தேவர் மகன் என்று படம் எடுத்தால், ஓடாது; மாறாக அது முடங்கும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ், கிருண்ஷசாமிக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். திரைப்படங்களில் அல்லது படங்களின் தலைப்புகளில்  நீங்கள் முடிவுகளை எடுக்க முடியாது.. அது நடிகர்களாலும் தயாரிப்பாளர்களாலும் முடிவு செய்யப்படுவது என்று கூறி உள்ளார்.

மேலும்,. இரண்டு சமூகங்களுக்கிடையில் மோதல் ஏற்படும் வகையில், தேவர் மகனில்  எந்த காட்சியும் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பி உள்ளவர்,  தேவர் மகன் படத்தின் முடிவில் கமல் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார் என்று கூறி உள்ளார்.