நடிகர் மாதவன் போதைக்கு அடிமையா ? ரசிகர் கருத்தால் சர்ச்சை…

 

சமூக வலைத்தளங்களில், சினிமாவைத் தாண்டி சொந்த விஷயங்களையும் பகிர்ந்து கொள்பவர் நடிகர் மாதவன்.

அண்மையில் மாதவன் குறித்து ரசிகர் ஒருவர், வலைத்தளத்தில் சர்ச்சை கருத்தை பதிவிட்டிருந்தார்.

“மாதவனை முன்னர் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் இப்போது மாதவன், போதைபழக்கத்தாலும், குடி பழக்கத்தாலும் தனது சினிமா வாழ்க்கை மற்றும் சொந்த வாழ்க்கையை சீரழித்துக்கொண்டார். அவரது முகம் மற்றும் கண்ணை பார்த்தால், இதனை உணர்ந்து கொள்ளலாம்” என அந்த ரசிகர் குறிப்பிட்டிருந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மாதவன் “உங்களுக்கு ஏதோ நோய் என நினைக்கிறேன். உடனடியாக டாக்டரை பாருங்கள்” என அந்த ரசிகருக்கு அட்வைஸ் செய்துள்ளார்.

மாதவன் இப்போது விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை “ராக்கெட்ரி : தி நம்பி எபெக்ட்” என்ற பெயரில் டைரக்டு செய்து வருகிறார்.

– பா. பாரதி

You may have missed