லாக் டவுனில் போட்டோகிராபர் ஆன மம்முட்டி..

டிகர் மம்மூட்டி கொரோனா ஊரடங்கில் வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் கேட்ட வண்ணமிருந்தனர். அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேமரா ஃபோக்கஸ் செய்து அக்கம்பக்கத்து மரங்களில் இருக்கும் பறவைகளை தேடிப்பிடித்து புகைப் படம் எடுத்து வருவதாக பகிர்ந்திருப்பதுடன் மூன்று பறவைகளின் படங்களை வெளியிட்டு லட்சக்கணக்கில் லைக்ஸ் அள்ளியிருக்கிறார்.


போட்டோகிராபி தனது பழைய ஹாபி என்று கூறியிருப்பதுடன், வீட்டில் இருப்பதாகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்திருக் கிறார் மம்மூட்டி.