மன்சூர் அலிகான் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி

சேலம்

சேலம் மத்திய சிறையில் உள்ள மன்சூர் அலிகான் உடல்நலக் குறைவு காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

சேலம் 8 வழிச்சாலை மற்றும்  விமான நிலைய விரிவாக்கம் ஆகிய திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.  இதை ஒட்டி கடந்த மே மாதம் மன்சூர் அலிகான் ஒரு கூட்டத்தில் பேசி உள்ளார்.  அப்போது அவர் பொதுமக்களை தூண்டி விட்டதாகவும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதாகவும் வழக்கு பதியப்பட்டது.

சேலம் மாவட்டக் காவல்துறையினர் சென்னை சென்று நடிகர் மன்சூர் அலிகானை அவர் இல்லத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைந்தனர்.   சனிக்கிழமை அன்று மன்சூர் அலிகான் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.    அதன் பிறகு சிறைத்துறை அதிகாரிகள் அவருடன்  பேச்சு வார்த்தை நடத்தியதில் உண்ணாவிரதத்தை அவர் கைவிட்டார்.

இன்று சேலம் மத்திய சிறையில் உள்ள மன்சூர் அலிகானுக்கு திடீர் என உடநலக்குறைவு ஏற்பட்டுள்ளது.   அதனால் அவரை சிறை அதிகாரிகள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.   அவருடைய தற்போதைய உடல்நிலை குறித்து தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.