பாலிவுட் நகைச்சுவை நடிகர் மோஹித் பாகெல் புற்று நோயால் காலமானார்….!

பாலிவுட் நகைச்சுவை நடிகர் மோஹித் பாகெல் காலமானார், அவருக்கு வயது 27. மோஹித் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த ஆறு மாதங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் புற்றுநோய்க்கான சிகிச்சையை மோஹித் மேற்கொண்டிருந்தார்.

நோய் முற்றியதால், சனிக்கிழமை, மதுராவில் இருக்கும் அவரது இல்லத்தில் மோஹித் உயிர் பிரிந்துள்ளது.

மோஹித்தின் மரணத்துக்கு பல பாலிவுட் பிரபலங்களும் இரங்கல் தெரிவிது வருகின்றனர் .