நடிகர் நகுல், நடிகை தேவயானி அம்மா மரணம்….!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான தேவயானி மற்றும் நடிகர் நகுல் ஆகியோரது அம்மா இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.

சென்னையில் வசித்து வந்த நகுல் மற்றும் தேவயானியின் அம்மா லட்சுமி ஜெயதேவ், உடல் நிலை பாதிப்பால் சிகிச்சைப் பெற்று வந்தவர், இன்று அதிகாலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

திரை உலகினர் அவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.