நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த நிகில் சித்தார்த்……!

‘ஹாப்பி டேஸ்’, ‘கிர்க் பார்டி’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நிகில் சித்தார்த். இவர் பல்லவி வர்மா என்ற மருத்துவரை கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தார்.

இவர்கள் இருவருக்கும் பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் முடிந்தது. ஏப்ரல் மாதம் இவர்கள் திருமணம் திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் ஊரடங்கின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.

இப்போது நான்காவது கட்டமாகவும் ஊரடங்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மே 14 திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

அதன்படி ஹைதராபாத்தில் இருக்கும் நிகிலின் பண்ணை வீட்டிலேயே இந்தத் திருமணம் நடந்து முடிந்தது. அரசின் விதிமுறைகளின் படி, குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் மட்டும் இதில் பங்கேற்றனர். வந்தவர்களுக்கு சானிடைஸரும், முகக் கவசமும் கொடுக்கப்பட்டது.