நடிகை நிகிலா விமலின் தந்தை காலமானார்….!

சசிகுமாருடன் வெற்றிவேல், கிடாரி உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வருபவர் நிகிலா விமல். மலையாள சினிமாவிலும் இவர் பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார்.

இந்நிலையில் நிகிலா விமலின் தந்தை பவித்திரன் இயற்கை எய்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலமாகியுள்ளார். இதை தொடர்ந்து திரை பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

புள்ளிவிவரத் துறையில் இருந்து ஓய்வு பெற்ற பவித்ரன், அலக்கோடு ராயரோம் உ.பி. பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றினார். சிபிஐ (எம்எல்) மாநில இணை செயலாளராகவும், மாவட்ட செயலாளராகவும் பணியாற்றினார்