கொரோனா லாக்டவுனில் நடிகர் திருமணம்.. நட்சத்திர ஓட்டலில் நடந்தது..

டோலிவுட் இளம் நடிகர் நிதின். இவருக்கும் ஷாலினிக்கும் கடந்த 3 மாததத்துக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. துபாயில் கடந்த ஏப்ரல், மே மாதத்தில் திருமணம் நடத்த திட்டமிட்டபோது கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு நடத்த முடிவு செய்யப் பட்டு திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு முடிவது போல் தெரியாதால் உடனே திருமணம் நடத்த குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடந்தது. மணமகன், மணமகள் குடும்பத்தினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

 


நிதின் திருமண படங்கள் நெட்டில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இளம் நடிகர் நிதின், ஜெயம் என்ற படம் மூலம் ஹீரோவாக தெலுங்கில் அறிமுக மானார். அப்படம் ஜெயம் என்றபெயரில் தமிழில் ரீமேக் ஆனது, அதில் ஜெயம் ரவி ஹீரோவாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.