பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரித்து வெளியான படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ . அதிக வரவேற்பை பெற்ற இந்தப் படத்துக்காக பல்வேறு விருதுகளை வென்றார் பார்த்திபன்.

இந்தப் படத்தின் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் ரீமேக்கிற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பாலிவுட் ரீமேக்கில் நவாசுதீன் சித்திக் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

இந்தப் படத்தைப் பார்த்த ஹாலிவுட் இயக்குநர் ஒருவர் , பார்த்திபனை அவருடைய படத்தில் நடிக்கவைக்க அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பார்த்திபன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “02-02-2020. இன்றைய தேதியின் வி(சேஷ)சேதி. விஜய் சேதுபதியின் பாதியாக நடிக்கும் ‘துக்ளக் தர்பார்’, Amazon-னின் புஷ்கர் காயத்ரி வழங்கும் ‘சுழல்’என்ற வெப் சீரிஸ், சிம்ரனின் சொந்தப் படம், எழில் இயக்க ராஜேஷ் குமாரின் நாவலில் நடிக்கும் படம், சமீப பிரபல இயக்குநரின் படம், என் ‘இரவின் நிழல்’ இன்னும் சில! இவையன்றி.

Really its a great pleasure for me to announce that, ஏன் ஏன் Suddenly ஆங்கிலம்? Yeah! இவ்வருட கடைசியில் ஒரு நேரடி ஆங்கிலப் படத்தில் நடிக்கிறேனாக்கும்…( OS7 பார்த்த ஹாலிவுட் இயக்குநரின் அழைப்பில் மார்ச்-ல் L A செல்கிறேன்) மற்ற விவரங்கள் விரைவில்” என்று தெரிவித்துள்ளார் பார்த்திபன்.