சினிமாவில் நடிப்பவர்கள் பகட்டாக வாழ்வதாக பலர் எண்ணுகின்றனர்; சிலரை தவிர பலரின் வாழ்க்கை கஷ்டத்தில்தான் இருக்கிறது. ரஜினி, கமல், விஜய், அஜீத் என எல்லா ஹீரோக்க ளுடனும் சண்டைக்காட்சியில் நடித்தவர் பொன்னம்பலம்.
சிறுநீரகத்தில் (கிட்னி) பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்து வந்திருக்கிறார், அவர் கூறியதாவது:

பார்ப்பவரை எல்லாம் சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும் உடம்பை முதலில் கவனி என்று நான் சொல்வேன் ஆனால் எனக்கே இப்படி யொரு உடல் பாதிப்பு வரும் என்று எண்ணிப்பார்க்க வில்லை. சினிமாவில் கோடிக்கணக்கில் நான் சம்பாதிக்கவில்லை. நாட்டமை படத்தில் எனக்கு சம்பளமே 37 ஆயிரம் தான் . என் தங்கைகளுக்கு கல்யாணம், சீர்வரிசை என்று பணத்தை செலவழித் தேன். ஒன்றும் சேர்த்து வைக்கவில்லை. இப்போது என் குடும்பத்தை காப்பாற்ற முடியவில்லை. எனக்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து, இருந்த ஒரு குண்டுமணி தங்கத்தைகூட விற்றுத்தான் சிகிச்சை செய்துகொண்டேன். ஆனால் அடுத்து மருந்து வாங்ககூட காசில்லாத நிலை ஏற்பட்டது. 20 முறை தற்கொலை எண்ணம் வந்தது. என் மனைவி ஆறுதல் கூறினார். சரத்குமார் சாரிடம் உதவி கேட்டேன் அவர் தயாரிப்பாளர் டி.சிவாவிடம் சொல்லி 50 ஆயிரம் மருத்துவமனைக்கு கட்டினார். அதன்பிறகுதான் முதல் ஆபரேஷன் நடந்தது. ரஜினிசார், கமல்சார் நலம் விசாரித்தனர். கமல் மருத்துவமனை பில் கட்டுவதாக கூறி உள்ளார். விஷால், கார்த்தி தலா 10 ஆயிரம் அளித்தனர். மருந்து வாங்க உதவியது.
ரஜினிசார் எனக்கு கிட்னி மாற்ற சிகிச்சை செய்வதாக கூறி உள்ளார். ஆனால் இப்போ தைக்கு எனக்கு வாழ வீடில்லை. எங்களுக்கு தங்குவதற்கு ரஜினிசார் ஒரு வீடு உதவ வேண்டும்.
நடிகை காயத்ரி ரகுமானிடன் உத்வி கேட்டபோது அவர் பாஜ கட்சி தலைவர் முருகன்சரிடம் சொல்லி ரூ 2 லட்சம் உதவி பெற்றுத் தந்தார். விஜய் அஜீத், லாரன்ஸ் போன்றவர்களிடமும் உதவி கேட்கிறேன். எனக்கு ஸ்டன்ட் யூனியன் இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை. எனது ஓய்வு பணத்தையாவது யூனியன் தர வேண்டும் என்று கேட்கிறேன்.
இவ்வாறு பொன்னம்பலம் கூறினார்.