ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போதே மரணமடைந்த பிரபல நடிகர் பிரபீஷ்…..!

சமீப காலமாக பல சினிமா நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் அடுத்தடுத்து மரணித்து வருவது ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்கள் முன்பு தான் நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம் அடைந்தார்.அந்த காயம் ஆறுவதற்கு முன்பு அடுத்ததாக திரைத்துறையில் மற்றொரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தற்போது கேரளாவில் மற்றுமொரு நடிகர் உயிரிழந்த செய்தி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவில் டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும், நடிகராகவும் பிரபலமானவர் பிரபீஷ். கொச்சியில் ஒரு விழிப்புணர்வு வீடியோவுக்கான ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது, அவர் திடீரென சரிந்து விழுந்துள்ளார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.