கொரோனா ஊரடங்கின்போது பல நடிகர், நடிகைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பல கோடி நிதியை அரசு மற்றும் திரைப்பட துறை அமைப்பினருக்கும் அளித்தனர். பலர் நிதியளித்ததோடு பலர் தங்கள் வேலையை முடித்துக்கொண்டனர். ஆனால் சினிமாவில் வில்லனாக நடித்த பிரகாஷ்ராஜ், சோனூசூட் போன்றவர் கள் நிஜ ஹீரோக்களாக மாறி கொரோ னாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் நேரடியாக உதவிகள் செய்து வருகின்றனர்.
பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு உணவு தங்கும் இடம் அளித்ததுடன் பலர் தங்கள் ஊர்களுக்கு திரும்பி செல்ல போக்குவரத்து ஏற்பாடு செய்து கொடுத்தனர்.
கர்நாடகாவின் கிராமப்புற பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் படிப்பை தொடரமுடியாமல் உள்ளனர். அப்படிப்பட்டவர்களை பிரகாஷ்ராஜ் தனது அறக்கட்டளை மூலம் திரட்டி அந்தந்த பகுதியிலேயே ஆசிரியர், ஆசிரியைகளை ஏற்பாடு செய்து மரத்தடியின் கீழும் அமர வைத்தும், வீட்டிற்கும் சென்று பாடம் நடத்தி வருகிறார். அதில் மாணவ, மாணவிகள் ஆர்வமாக சேர்ந்து கல்வி கற்கின்றனர்.