திமுக, அதிமுக என மாறி… மாறி… இருந்தவர்: இன்று பாஜகவில் இணைந்தார் ராதாரவி!

சென்னை:

பிரபல வில்லன் நடிகரான ராதாரவி, திமுக, அதிமுக என மாறி மாறி இணைந்து ஆதாயம் பெற்று வந்த நடிகர் , திடீர் திருப்பமாக இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

சின்னத்திரை, வண்ணத்திரை இரண்டிலும் நடித்து பிரபலமானவர் மூத்த நடிகர் ராதாரவி. சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். இவர் ஆரம்ப காலத்தில் திமுகவில் இணைந்து பணியாற்றி வந்த நிலையில், பின்னர் ஜெ. முன்னிலை யில் அதிமுகவில் இணைந்து எம்எல்ஏவாகவும் பணியாற்றினார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு அதிமுக சார்பாக சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஆவார். அவரது பதவி காலம் முடிந்ததும் சிறிது காலம் அதிமுகவில் இருந்தார்.பின்னர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் திமுகவில் இணைந்தார்.

சர்ச்சைக்குரிய வகையில் நயன்தாராவை விமர்சித்து கருத்து தெரிவித்ததால், திமுக தலைமை கண்டித்த நிலையில், அங்கிருந்து  விலகி எடப்பாடி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

இந்த நிலையில் ராதாரவி பாஜகவில் இணைந்துள்ளார்.சென்னை வந்த பாஜக செயல்தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் இணைந்தார்.

கார்ட்டூன் கேலரி