கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு ராகவா லாரன்ஸ் 50 வீடுகள் கட்டித் தருகிறார்.

சென்னை

ஜா புயலால் வீடிழந்தவர்களில் 50 பேருக்கு வீடு கட்டித்தருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தையே புரட்டிப் போட்ட கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பலர் வீடு வாசல் இழந்து தவித்து வருகின்றார். பல்லாயிரக்கணக்கான தென்னை மற்றும் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. தென்னை மரம் சேதமடைந்ததால் ஒரு விவசாயி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

புயலால் பாதிக்க்ப்பட்டவர்களுக்கு பலரும் நிவாரண உதவிகள் அளித்து வருகின்றனர். அவ்வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ், “கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பார்க்கும் போது நான் மிகவும் வேதனை அடைகிறேன். பல நல்ல உள்ளங்களும் அராசும் தொடர்ந்து நிவாரணப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நான் என் பங்குக்கு வீடுகளை முழுவதுமாக இழந்த 50 பேருக்கு வீடுகள் கட்டித் தர உள்ளேன். இவ்வாறு வீடுகளை முழுமையாக இழந்து பாதிப்புக்குள்ளானவர்க்ள் என்னை தொடர்பு கொள்ள வேண்டும். நானே நேரடியாக அங்கு வந்து சேதங்களை பார்வை இடுகிறேன். அவர்களுக்கு வீடு கட்டித் தந்து ஒரு நிரந்தர தீர்வினை அளிக்கிறேன்.

பல பெரியவர்கள் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என சொன்னார்கள் . நானும் இந்த ஏழைகளின் மகிழ்ச்சியில் இறைவனைக் காண முயற்சி செய்கிறேன். இந்த தொண்டில் எனக்கு ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனமும் ஆலோசனைகளை வழங்க உள்ளது : என அறிக்கை வெளியிட்டுள்ளார்.