கேரள வெள்ளம் : நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.1 கோடி உதவி

சென்னை

கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ. 1 கோடியை நடிகர் ராகவா லாரன்ஸ் வழங்குகிறார்.

கேரள மாநிலத்தில் வரலாறு காணாத அளவுக்கு கொட்டி தீர்த்த கனமழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடு உள்ளிட்ட அனைத்து உடைமைகளையும் இழந்து வாடுகின்றனர்.    அனைத்து தரப்பு மக்களும் தங்களால் இயன்ற பொருட்களையும் பணத்தையும் நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர்.

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சார்பாக ரூ. 1 கோடியை கேரள வெள்ள நிவாரண நிதியாக வழங்க உள்ளார்.   இந்த நிதியை அவர் வரும் 25 ஆம் தேதி அன்று கேரள முதல்வரி பினராயி விஜயனிடம் நேரில் வழங்க திட்டமிட்டுள்ளார்.

You may have missed