ரஜினியின் “பேட்ட”  நியு லுக் வெளியீடு

ஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “பேட்ட”  திரைப்படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்து வரும்  பேட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு லக்னோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினியுடன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட  பலர் நடித்து வருகிறார்கள்.

இந்தப் படத்தின் மோஷன் பிக்சர் மற்றும் முதல் லுக் சமீபத்தில் வெளியானது. ஆனால், அதற்கு வழக்கமான  வரவேற்பு ரசிகர்களிடம் கிடைக்கவில்லை. ரஜினியின் ஸ்டைலும், மோஷன் பிக்சரின் பின்னணி இசையும் பல்வேறு வித விமர்சனத்திற்கு ஆளானது

இந்நிலையில், பேட்ட ; படத்தின் இரண்டாவது லுக் இன்று வெளியாகி இருக்கிறL. ரஜினி கெடா மீசை, வெள்ளை சட்டை, வேட்டியுடன் இருப்பது போல் போஸ்டர் இருக்கிறது. ரஜினியின் இந்தப் புதுத் தோற்றம் கொஞ்சம் மாறுபட்டு இருக்கிறது.

ரஜினி ரசிகர்கள் இந்த போஸ்டரை வெகுவாக ரசித்து பாராட்டி வருகிறார்கள்.

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: actor-rajini-kanths-petta-second-look-released, ரஜினியின் “பேட்ட”  நியு லுக் வெளியீடு
-=-