நடிகர் ரஜினிகாந்த் அரசியல்வாதியாக முடியாது – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

சென்னை:

டிகர் ரஜினிகாந்த் ஆன்மீகவாதி, அவர் அரசியல்வாதியாக முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீகவாதி, அவர் அரசியல்வாதியாக முடியாது என்றும், முதல்வராக விருப்பமில்லாத ஒருவர் அரசியலுக்கு வந்தால், அவரை விருபுகிறவர்கள் கூட அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சென்னை திரும்பினார் ரஜினிகாந்த் திட்டமிட்டபடி 31-ம் தேதி புதிய கட்சியை ரஜினிகாந்த் அறிவிப்பாரா? என ரஜினி ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.